உள்ளங்கை குழந்தை

இறக்கி விட்டேன்
சிணுங்க ஆரம்பித்து விட்டாய்..
தூக்கி வைத்தேன்
பேசி உறவாட ஆரம்பித்து விட்டாய்..
அதிகம் பேசினேன்
பசியால் அழ ஆரம்பித்து விட்டாய்..
கீழே போட்டேன்
அடிபட்டு மரணித்து விட்டாய்..
இதோ மீண்டும் தேடுகிறது என் கை
உன்னை போன்ற அழகிய கைபேசியை..

எழுதியவர் : தீபாகுமரேசன் (15-Dec-15, 5:22 pm)
Tanglish : ullangai kuzhanthai
பார்வை : 768

மேலே