ச்சும்மா கடுப்புல கொஞ்சம் பொலம்பல் - உதயா
![](https://eluthu.com/images/loading.gif)
எதோ ஒன்று
என் மனதை கசக்கி
கூர்மையான ஊசியால்
ஆழமாக குத்தி கிழிக்கிறது
தலையில் உள்ளே
ஏகப்பட்ட தேள்கள்
மாறி மாறி கொட்டும்
ஏன் என்றுதான்
தெரியவில்லை
இப்போதெல்லாம்
எனது பொழுதுகள்
சிகரெட்டிற்கும்,
மதுவிற்கும் மட்டுமே
சொந்தம்
ஒரு கையில்
புகைத்துக்கொண்டே
மறுகையில் மதுவை
ருசிப்பதுதான்
எவ்வளவு சுகம் ..
ஒவ்வொரு கோப்பையிலும்
கொஞ்சம் கொஞ்சமாய்
மிதந்துகொண்டே செல்வேன்
நான் விடும்
புகை வலைகளுக்குள்
என் வாழ்வின் வேகத்தடைகள்
தொலைந்து கிடப்பது
கடைசிவரையும் தெரிந்தது
ஆனாலும் தெரியவில்லை
இருந்தாலும் எனக்கு
எதன் மேலும் பற்று இல்லை
அவளை தவிர ,
இப்போது அந்த வரிசையில்
புகைப்பதையும் குடிப்பதையும்
இணைத்துக்கொண்டேன்
இந்தமுறை ஒரு மூச்சிற்கு
கஞ்சாவை இழுத்தேன்
போதை வேகமாக ஏறியது
சிறகுகளும் முளைத்து
பறக்க தயாரானேன்
திடீரென
எங்கிருந்தோ வந்த
அவள் நினைவுகள்
எல்லாத்தையும்
நாசம் செய்துவிட்டது
எங்கோ
பறந்துக்கொண்டிருந்த நான்
மெதுவாக கண்விழித்தேன்
நேற்று எனது அறையில்
இன்று நண்பன் அறையில்
நாளை தெருவாக கூட இருக்கலாம்
அவள் இன்னும்
தேவதையாகவே இருக்கிறாள்
நான் மட்டும் அவள்
சிறகு கழற்றிய இறகாக
புயலில் நானாகவே சிக்கிக்கொண்டேன்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம...........
இன்னும் மிச்சமிருக்கிறது
குறையாத அவள் நினைவுகளைப் போல
கொஞ்சம் மதுவும் சிகரெட்டும்
நாளைய பொழுதிற்கு
இதுவே போதும்
இல்லையெனில்
இன்னும் கொஞ்சம்
தேவைப்படலாம்
ஆனால் நான்தான் இருப்பேனா
என்று தெரியவில்லை
ஒருவேளை இல்லையென்றாலும்
நான் மிதந்து கொண்டேதான் இருப்பேன்
என்ன, இன்னும் கொஞ்சம் அதிகமான உயரத்தில்