மறந்து விட கற்றுக் கொடு

பூமியை
உதறி எறிந்து விட்டு
மேகங்களை சல்லாபிக்கிறது காற்று

நீ உதறி விட்டு சென்று விட்டாய்
வெறும் அண்ட வெளியில்
நாடித் துடிப்பிற்காய்
அழுத்த சக்தியின்
அதி நிர்மாணத்தால் மட்டும்
பெருமூச்செறிந்து
கனத்த துடிப்போடு
காத்திருக்கிறது இந்த ஊற்று

உனக்கும்
எனக்கும் உடன்பாடில்லைத்தான்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
விவாதம் புரிய
இதுவா நேரம்
அண்டமும் சதைப்பிண்டமுமாய்
இருந்து விட்டுப் போய் விடுவோம்
போ. .............

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (16-Dec-15, 5:04 am)
பார்வை : 222

மேலே