புன்னகை ஒரு நாவல்

உன் புன்னகை
நீ அன்றாடம் வெளியிடும்
கவிதைப் புத்தகம் என்றேன்
அது மரபு வழி வெண்பா
என்கிறான் நண்பன்
அது புதுக் கவிதை
என்கிறேன் நான்
நீயே சொல் !
இரண்டும் இல்லை
காதல் என்னும்
நீண்ட நாவல் என்றாள்
கதாநாயகன் யாரோ
என்றேன்
நீங்கள் இருவரும் இல்லை
என்றாள் !
----கவின் சாரலன்