கவிதை அதிசயம்

கண்ணன் கழலிணை நண்ணிய நம்மாழ்வார்
பண்ணும் படிப்பித்தப் பாடங்கேள் -தண்ணீரில்
சங்கப் புலவர்கள் தாம்வீழ பாட்டெழுமே
சங்கப் பலகையிலே தான்

சேமம் குருகையோ செய்யுளும்யார் செய்யுளோ?
ஆமாம் தமிழ்ச்சங்கத் தன்பரைக்கேள் - பூமியிலே
நாற்பதுபேர் பாடி நயஞ்சொற்கள் ஒன்றான
நூற்பா விதுவே நுகர்.

ஒரு சமயம் நம்மாழ்வாரை , வேதம் தமிழ்செய்த நன்மாறன் ,தெய்வப்புலவர் என்றெல்லாம்
சொல்வதை தமிழ்ச்சங்கப்புலவ்ர்கள் கேலிசெய்தனராம், அதனால் மனம் நொந்த மதுரகவியிடம்
நம்மாழ்வார் அவர்தம் கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் என்ற பாவினை எழுதி
தமிழ்ச்சங்கப்பலகையி வைக்கக் கூற அவரும் அவ்வாறே செய்ய தமிழ்ச்சங்கப்பலகை புலவர்களை
எல்லாம் கவிழ்த்து விட்டு நம்மாழ்வார் பாடலை மட்டும் ஏந்தி வந்ததாக சொல்வர்
தத்தி கரையேறிய புலவர் பெருமக்கள் அனைவரும் பெருமாளையும் , ஆழ்வாரையும் குறித்து
ஆளுக்கொரு பாடல் எழுதினர் ஆனால் அனைத்தும் ஒன்றாகவே இருந்தது இதுதான் கவிதை அதிசயம் அந்தப் பாடல்
இதோ

சேமம் குருகையோ செய்யதிரு பாற்கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோ - தாமம்
துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கு
முளவோ பெருமாள் உனக்கு

முதலில் உள்ள வெண்பாக்கள் 2 ம் இதனை பாட வந்ததே.

எழுதியவர் : சு.அய்யப்பன் (16-Dec-15, 5:27 pm)
Tanglish : kavithai athisayam
பார்வை : 335

மேலே