அரசாங்கம் - 1
செய்தி:
ஆறா, சாக்கடையா? - சமஸ் - டிச.2015, ‘தி இந்து’
*****************************************************************
சென்னையின் நீர்வழித்தடங்களில் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர், ஆறுகளில் திறந்துவிடப்படுவதை அரசே அனுமதிக்கிறது. சென்னையின் நீர்வழித்தடங்களில் கூவமாற்றில் 105 இடங்களிலும் பக்கிங்ஹாம் கால்வாயில் 183 இடங்களிலும் அடையாற்றில் 49 இடங்களிலும் கழிவுநீர் கலப்பதை அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. இதை அயோக்கியத்தனம் என்று எழுதினால் அந்த வார்த்தை வெட்கப்படும். ஆனால், இது குறித்த குற்றவுணர்வு ஏதும் இல்லாத அதிகார வர்க்கம்தான் மழையின் மீதும், வெள்ளம் மீதும், ஆற்றின் மீதும் பழியைப்போட்டு விவாதம் செய்கிறது. எந்தத் துணிச்சலில் அவர்கள் பேசுகிறார்கள்? மக்களுக்கு எதுவும் தெரியாது; கேள்வி கேட்க ஆள் கிடையாது எனும் துணிச்சல்.
______________________________________________________________________
கவிதை:
---------------
ஏ அரசாங்கமே,
கடமை எது எது கூட தெரியாது,
காரியம் ஆற்றாது,
சமாதானம் சொல்ல மட்டும்
சாதுர்யமாய் பேசுவது,
வெட்கக்கேடான
விவரங்கெட்ட
செயலென்று
பாமரன் பழிக்குமளவுக்கு
பாதகம் செய்வது கண்டு
பதைக்கிறது;
அறிவுடன் செயலாற்றினால் தான்
அதற்கு பெயர் அரசு.
அரசியல் கட்சிகளின் வேலை கட்சியை வளர்ப்பது,
தலைமையை போற்றுவது, தொண்டனை வார்ப்பது;
அந்தந்த கட்சிகள் அவரவர் வேலையை சரியாகத்தான்
செய்கிறார்கள்; அவர்களை சாடினால் அதுவும் அரசியலாகும்.
அவர்களை ஒதுக்குவோம்.
ஒரு அரசாங்க கட்டமைப்பில்
அரசாளும் ஒரு கட்சி தந்தையென கொண்டால்,
அரசு இயந்திரம் என்பது ஒரு தாய் போல.
பசி பிணி கொண்டால்,
பிள்ளைகளை தந்தை கூட மறக்கலாம்,
தாய் மறப்பாளோ? மறந்தால் அவள் தாய் ஆவாளோ?
அரசு ஒரு தானியங்கும் எந்திரம், மக்களாட்சி தத்துவத்தில்
நேரடியாக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம்,
மக்கள் சேவையே மகேசன் சேவை என்று பணியமர்கையில்
எடுக்கும் உறுதி மொழியில் பிசகலாகுமோ?
பிசகினால் மகேசனின் தீர்ப்பு எதுவாக இருக்கும்?
மழை வந்து கொடுப்பதற்கு பதில் கெடுக்கும்!
சுதந்திரம் உருவாக்கி விட்ட சுயம் - நம் சுகத்திற்கு
பொறுப்பேற்கும் அரசு மையம்,
அது ஒரு தனி இயந்திரம்,
அது இயங்குவதில் திறமைக்கு பஞ்சமா?
பட்ஜெட் போடுவதும் பற்றாக்குறையாவதுவும்
பழங்கதை தானே!
ஒவ்வொரு அரசுக்கும் உலக வங்கி கடன் அள்ளித்தர
இருப்பது நடப்புகளில் தெரிகிறது.
இயங்காத அரசுக்கு இவ்வளவு கடன் என்றால்
ஒரு இணக்கமான இயங்கும் அரசுக்கு
எத்தனை கடனாய் இருந்தாலும் கேள்வி கேட்பரோ?
ஒரு அரசியல் கட்சிக்கு 5 வருடம் தான் பொறுப்பு,
ஆனால் அரசாங்கத்திற்கு,... அரசு அதிகாரிகளுக்கு ...?
கட்டபொம்மனும் வாஞ்சிநாதனும் கேள்வி கேட்டார்கள்;
எதேச்சதிகாரத்தை எதிர்த்தார்கள்?
நீங்கள் இன்னுமொரு கட்டபொம்மனை, வாஞ்சிநாதனை
பார்க்க வேண்டுமா?