கண் கெட்டபின் சூர்ய நமஸ்காரம்
காதலில் வீழ்ந்த பின்
மீள முனைவது ?!
இளமை இழந்த பின்பு
இல்லாளை காதிலப்பது ?!
செல்வம் தொலைத்த பின்னே
சேமிக்க என்னுவது ?!
தீயாய் சொற்களை உமிழ்ந்துவிட்டு
அதை ஆற்ற நினைப்பது ?!
கிடைக்கும் நேரத்தை வீனகிவிட்டு
நேரம் இல்லாமல் அலைமோதுவது ?!
கற்பனையில் மிதந்துகொண்டு
நிஜத்தில் நிர்மூலமாவது ?!
எதிர்காலத்தை நினைத்து பயந்து
நிகழ்காலத்தின் இன்பத்தை நுகர மறப்பது ?!
மானுடா இப்பொழுதாவது விழித்துக்கொள் ???
உனக்கான சூரியன் இன்னும் அஸ்தமனமாகவில்லை !!!!