வாருங்கள் தோழர்களே!
இதய சிறையில் அடைத்திடுங்கள்
இருந்துவிடுகிறேன் நட்போடு
கண்களிலாவது கைது செய்யுங்கள்
கட்டுண்டு கூடவே வருகிறேன்
வாய்சொல்லில் திருந்த சொன்னால்
வாழ்நாளில் ஒருமுறை திருந்திடுவேன்
மூச்சு முட்ட இனி சிரித்திருக்கலாம்
மூடிகொள்வோம் காதினை மட்டும்
பிரிவு குற்றம் இல்லையென்று
பேசிக்கொண்டே வழக்காடுவோம்
கைகள் தட்டி தீர்ப்பு வரவேற்போம்
கால வழியில் நீதி நட்பில் சேர்ந்து நடப்போம்