என் நண்பர்களே!
இரு கண்களாய் என் நட்பு
என்ன செய்ய ?
இமை மூடாமல் இருக்கும்போது
கண் கலங்கி விடுகிறது.
கண் மூடி இருந்திருந்தால்
கனவுகளிலும் சேர்ந்திருந்தால்
இமை பிரிக்க முடியாமல்
ஏமாறும் இரவுகளில்
பகல் வந்து எழுப்பியே
பழகிடுங்கள் நட்போடு சொல்லிடுமே !
இருகண்கள் விழிப்பதும்
இனியேன் கண்ணீரென்று
துடைப்பதற்கும் தோள்சேரும்
துணையாகும் தூய நட்பில்
தொலைதூர ஆயுளுக்கும்
தொடர்ந்து வரும் பிறவிக்கும்
இருகண்களாய் என் நட்பு
என்னுடனே இருக்கவேண்டும்
கோபம் வருத்தம் மாறிவிட்டால்
நட்பும் இன்பம் தேடிவரும்
நேற்று இன்று நாளையெல்லாம்
நினைவில் வருமே முதல் சந்திப்பு
முடிந்துவிடா இன்னாளோடு
முதல்சந்திப்பும் மறு சந்திப்பாய் மாறிடுமே