agnikunchugal
உப்பு போட்டுத்தான் தின்றோமோ ?
கோபம், ரோஷம் விற்றோமே !
ரௌத்திரம் பழகு என்றவனை-வெறும்
சித்திரமாய் சுவரில் ஏற்றிவிட்டோம் !!
ஏழை வயிறில் அடிக்கின்றான்,-அதை
மறுநாள் காலை மறக்கின்றோம்!
குருதி கொதிதேளுண்ட காலமெல்லாம்,
மறதியாக நாம் மறந்துவிட்டோம்!!
மதுவை அருந்திய மாந்தர்கள்,
மதிகெட்டு நடத்தும் நாடகங்கள்,
சாலையோரம் தினம் பார்கின்றோம்-அதை
சகித்து வாழ பழகிவிட்டோம்!!
பேருந்தில் பெண்படும் அவஸ்தைகளை,
வேருன்றி பார்க்க நேரமில்லை!
எச்சில் பட்ட படச்சுருளை,
மிச்சம் இன்றி பார்க்கின்றோம்!!
உமிழ்நீர் உமிழ்ந்து செல்கின்றான்,
மகிழ்ந்து அதனை துடைதேரிந்தோம்,
தமிழன் என்று சொல்வதற்கே,
தகுதி இன்றி வாழுகின்றோம்!!
அக்னி குஞ்சுகள் கண்டானே......
எங்கு அவைகள் காணவில்லை ?
சீக்கிரம் மறையும் வானவில்லை,
போல அவையும் மறைந்தனவா?
என்பேனா பிடித்து எழுதுவது,
வீணாய் போன இம்மக்களுக்கா ?
என்மனதின் குமுறல் கேட்பாயோ?
தமிழா மீண்டும் எழுவாயா?