உன் சைகையால் உன்னை காட்டிக் கொண்டாய்

உன் சைகையால் உன்னை காட்டிக் கொண்டாய் !

மூக்கை சற்று தேய்கிறாய் உன்னிடமிருந்து வரப்போவது நிராகரித்தல், சந்தேகம், அல்லது பொய்
நகத்தை கடிக்கிறாய் பாதுகாப்பின்மையும் , பதட்டமும் உன்னிடம் இருப்பதை அறிவேன்
உன் வேகமும் ,நிமிர்ந்த நடையும் தன்னம்பிக்கையை காட்டுகின்றது
இடுப்பில் கை வைத்து நின்று விட்டாய் உன் தயார் நிலை தெரிகிறது , யாரிடம் ஆக்கிரமிப்புக்கு ஆயத்தமாகின்றாய்

அமர்ந்த நிலையில் கால்களை உதைத்து சலிப்பை காட்டுகின்றாய்

உனக்கென்ன அமர்ந்தபடி கால்களை அகற்றி வைத்து நிம்மதியான நிலையாக இருக்கிறாய்
நெஞ்சுக்கு மேல் ஆயுதம் வைத்து பாதுகாப்புத்தன்மை காட்டுகின்றாய்.நானும் ஆயத்தமாகிவிடுவேன் எனது பாதுகாப்பிற்கு.

தோள்கள் தொங்க கைகளை கால்சட்டை பையில் சொருகி வெறுமையை காட்டுகின்றாய் கன்னத்தில் கை வைத்து திட்டத்திலும் ,சிந்தனையிலும் ஈடுபட்டு விட்டாய்
கண்ணை தேய்ப்பதால் சந்தேகம், நம்பிக்கையின்மை
கையை பின்னால் கட்டி நிற்பதால் கோபம், வெறுப்பு, அச்சம் காட்டுகின்றது

உள்ளங்கை மீது கை வைத்து அழுத்தி கைப்பற்ற திட்டமோ
கை மேல் தலை வைத்து கண்களை தாழ்த்தியதால் சலிப்பின் வெளிப்பாடோ
உரசும் கைகளால் எதிர்பார்ப்பில் உள்ளாயோ


கன்னத்தில் கை வைத்து திட்டத்திலும் ,சிந்தனையிலும் ஈடுபட்டு விட்டாய்
ஒரு முடிவை எடுக்க முயற்சி செய்ய கன்னத்தை தட்டிக் கொள்கிறாய்
கண்ணை லேசாகா தேய்த்து விடுகிறாய் சந்தேகமும் அவநம்பிக்கையும் வந்ததால்
விரலை தட்டுகிறாய் ,அசைக்கிறாய் இனிய இசையில் மகிழ்ந்து
முகத்தை திருப்பிக் கொள்கிறாய் வெறுப்பை காட்டிக் கொள்ள
இருமனம் கொள்வதால் காதை இழுத்து விடுகிறாய்
புன்னகைக்கிறாய் மகிழ்வை வெளிப்படுத்த
ஒவ்வொரு செயலுக்கும் எத்தனை சிந்தனைகள்...!!! உனக்குள் வெளிப்படுகின்றன.

எழுதியவர் : முகம்மது அலி (18-Dec-15, 8:56 am)
பார்வை : 79

மேலே