நிறப் பிரபஞ்சம்

அன்று பூரணச்சந்திர கிரகணமாயிருந்தது
புறத்து கட்டமிட்ட
சிதைகங்கு அணைந்தாற்போல கும்மிருட்டு
மேலும் நிசப்தம்
ஒரு ராப்பாடி மாத்திரம்
தூர எங்கிருந்தோ
இணைவேண்டி பாடிக்கொண்டிருந்தது
பார்த்தாயா
உன்னை என் உள்ளங்கைக்குள்
அடைத்துவிட்டேன் என்கிறது
நிரப்பில் சிப்பமாய்
ஒரு யுகத்தின் காதலுடை நிறப்பிரபஞ்சம்,,,
ஒரு மழைக்காலத்து
பாதையில்
என் குடைக்குள்ளே
நுழைந்திருந்தான்
அந்தக் கரஸ்பரிசமும் வெதுவெதுப்பும்
உடுத்தித் தீரும் முன்னமே
மழைநின்று
பாதைப்பிரிந்துபோனோம்
""யாரோவுடைய
பாத ஸ்பரிசத்திற்காய்வேண்டி
காதோர்த்திருந்த விருந்துக்காரனிடம்
பிறப்பினுடைய
இளைப்பாறுதல்களைத் தேடுகின்றேன்""
""அழைக்கப்படாத
இந்த அதிதியினோடு
வருத்தங்கள் வேண்டாமே
என் என்றென்றுக்குமான தனிமைத்தெரிதலுக்கு
காரணம் தெரியவில்லை
இதயத்தில் உதயமாகிற
மிருதுளமான வாதாயனங்களை
திறந்துவிட்டுப் பார்க்கிறேன்
அதோ மேகச் சக்கரங்களின் மேலே
அது அவனா என்று
தெரிந்துவிடும் ஆவல்களுடன் "",
,
இனி என்றாவது ஒருநாள்
இப்போது மாதிரி
உன் அழகான வைகறையைக் கொண்டுவா காலமே
அனுசரன்