கணவர்களுக்கு ஒருசொல் - பல விகற்ப பஃறொடை வெண்பா
காதலால் உங்கள் திருமண வாழ்க்கையின்
காதல்கோப் பையில் நிரம்பியே – போதுமெனச்
சொல்லாமல் என்றும் வழிய, தவறுநீசெய்
தாலொத்துக் கொள்!சரியென் றாலொன்றும் மாற்றினைச்
சொல்லாது வாயைமூடிக் கொள்!
Ref: The poem ‘A Word to Husbands’ by Poet. Ogden Nash.