கவிதை உதயம்
நிதமும் என் மதியில், ஒரு
உதயம் நிகழுது
இதம் தரவே அது, என்
இதயம் மகிழுது
எழிலானது
ஒளியாக விளைந்தது
பொலிவானது
நிலைக்கொள்ளவே எழுந்தது
இன்னேரம்
இன்னல் இருள் அழிந்தது
இன்பச்சுடர்
எனக்காக பிறந்தது
சித்ததில்
மலர்கள் மலர்கின்றன
சிந்தனைகளென
விளங்குகின்றன
நல்ல கானமாய்
உள்ளே ஒலிப்பதாய்
அற்புதமென்றானது
கற்பனை ஊற்றானது
தலை நிமிருது
நிலை உயருது
மூச்சில் முன்பிலா தன்மை வந்தது
மூளையில் முடிவுரா திண்மை நின்றது
எண்திசைகளுக்கும்
என் அசைவுகளை அனுப்புகிறேன்
எல்லோருக்கும் கிடைக்கவே
எழுத்துச் சுவைகளை பறப்புகிறேன்
வரையப்படாத ஓவியத்தை பரிசளிக்க
சரியான வார்த்தைகள் விரைந்தன
விழிகள் அரியவகை காட்சிகளைக்காண
வழிகள் பற்பல அமைந்தன
மகிழ திரை அகன்றது
புகழ் விரைந்து வருகிறது
இணைய வந்ததோ?
இணைக்க வந்ததோ?
வந்து விட்டது, வென்று விட்டது
நான்
கவிதைகளைத் தீட்டுகின்றேன்,
உவகையை உறுதுணையாக கொண்டுள்ளேன்
கவிஞன் என வாழுகின்றேன்….
நிதமும் என் மதியில், ஒரு
உதயம் நிகழுது
இதம் தரவே அது, என்
இதயம் மகிழுது
அதனால் என்னில்
பெருமிதம் நிலவுது!