பொன் விலங்கு

பொன் விலங்கு
இன்றைய நவீனமயமான உலகத்தில் மின்னணு சாதனங்கள்தான், நம்மை ஆக்ரமித்துள்ளன என்பதை யாரும் மறுக்க இயலாது.
தொலைக்காட்சியின் சின்னத்திரையில் ”ஆண் வில்லன்கள் யாரும் இல்லை. எல்லாமே பெண் வில்லிகள்தான். அந்த வில்லிகளின் பொழுதுபோக்கே அடுத்தவரின் குடும்பங்களைச் சீரழித்து சின்னாபின்னமாக்குவதே. ”சுதந்திரத்தை நல்லாவே பயன்படுத்தற” பெண் வில்லிகளின் கதாபாத்திரங்களோடும்தான் காலத்தைக் கடத்துகிறார்கள்.
கணவன், மனைவி, இருவருமே வேலைக்கு செல்பவர்களாய் இருந்தால், இருவரிடமுமே அலைபேசிகள். அதுவும் ”ஸ்மார்ட் போன்”தான் இருக்கும். வேலைக்கு செல்லாத நாட்களில் அந்த ஸ்மார்ட் போன் வீட்டில் ”இரண்டு வயது” குழுந்தைகளுக்கு ”பொம்மையாகவே” மாறிவிடும். ஸ்மார்ட் போனை சர்வசாதாரணமாக இயக்கும் இரண்டு வயது குழந்தை. ஆனால் பெரியவர்களோ சற்று தடுமாறுவார்கள்.
குழந்தையின் ”ஸ்மார்ட” கண்டு பெற்றோர்கள் வியப்பார்கள். ஆனால் நியாயமாக, இரண்டு வயது குழந்தைக்கு தேவையானது தாயின் அரவணைப்பும், உறக்கமுமே. அதுவே அக்குழந்தையின் வளர்ச்சிக்கான அஸ்திவாரம். ஆனால் அவற்றை ”ஸ்மார்ட போன்” பிடுங்கி கொள்கிறது.
”ஸ்மார்ட் போன்” இயக்குவதினாலோ, கணிணியை இயக்குவதிலோ குழந்தைகளுக்கு ஆளுமைத்திறன் வளர்ந்து விடாது. இந்த திறன் காலத்தின் சூழலுக்கு ஏற்ப இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது.
இரண்டு வயது குழந்தை தத்தி தத்தி நடக்க வேண்டும், கீழே விழவேண்டும். அதாகவே எழுந்து மீண்டும் நடக்க வேண்டும். அதை விடுத்து ”ஸ்மார்ட போனை” கையில் வைத்துக கொண்டு அதன் ஒலியைக் கேட்டு கொண்டும், அதன் ஒளிக்கதிர்களைப் பார்த்து கொண்டும் இருந்தால் ஆரோக்கியத்திற்கு உகந்ததா? என்று மருத்துவர்கள்தான் சொல்ல வேண்டும்.
அந்த குழந்தை நன்றாக விளையாட வேண்டும். பல்வேறு விளையாட்டு பொம்மைகள் வாங்கி கொடுத்தால், அது எந்த பொம்மையில் அதிக கவனம் ஈர்க்கப்படுகிறதோ, அந்த துறையில் ஆர்வம் உள்ளதென்று அறிந்து கொள்வோம். ”ஸ்மார்ட் போனில்” வீடியோ பொழுதுபோக்குகளை விளையாடுவது தற்போதைக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியதாக இருக்கலாம்.
ஆனால்,அதன் கேட்கும் திறனும், பார்வைத் திறனும் பாதிக்கப்படுகிறதா என ஆராய வேண்டும்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ”ஆசிரியர்கள்—மாணவிகள்” உரையாடலில், ஒரு மாணவி, ”கல்வி பயிற்றுவிப்பது மட்டுமே ஆசிரியர்கள் வேலை” அதைவிடுத்து, மாணவல, மாணவியர்களின் ஒழுக்க விஷயத்திலோ, தனிப்பட்ட முறையிரோ தலையிடுவது அவர்கள் வேலை இல்லை” என்று நேருக்கு நேர் முகத்தில் அடித்தாற்போல் சொல்கிறார்.
அவரின் வாதத்தின்படியே விட்டுவிட்டால், வகுப்பறையின் ஒழுக்கம், பள்ளியின் ஒழுக்கம் எல்லாமே சீர்குலைந்து ”ஒழுக்கக்கேட்டடிற்கு” துணைபோவது போல அல்லவா ஆகிவிடும். இருக்கிற தொழில்களில் கண்ணியமானதாகவும், மரியாதைக்குரிய தொழிலாகவும் உள்ள ஆசிரியத்த தொழிலையே அந்த மாணவி புரிந்து கொள்ளவில்லை என்றால்…அந்த மாணவியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அவர் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்.
இந்தளவுக்கு பேசுகிறரார் என்றால், அதற்கு காரணம் ”மிண்ணணு சாதனங்கள்” நவீன ஊடகங்கள் ஆகியவைதானே காரணமம். எல்லாவற்றையும் நாங்கள் அதில் தெரிந்து கொள்ளுகிறோம் என்கிறார்கள். ”மின்னணு சாதனங்கள், நவீன ஊடகங்கள் ஆகியவற்றில் தெரிந்து கொள்ளும் விவரங்கள் ”மாயஐாலமாக”வந்து விடுவதில்லை. யாரோ ஒருவர் ஆசிரியர் நிலையில் இருந்து விவரங்களை பதிவுசெய்து நவீனகாலத்திற்கேற்ப அனுப்பி வைக்கிறார். அதுவு் ஒரு ஆசிரிய பணியே. ஊடகமும், மின்னணு சாதனமும் கண்ணுக்கு தெரிந்த மாணவிக்கு ”பின்புலம்” தெரியாதது அந்த மாணவியின் துரதிருஷ்டம் என்றுதான் கூறவேண்டும்.
”நவீனயுகத்தில், நமது பயன்பாட்டுக்காக உருவாக்கிய மின்னணு சாதனைங்களைப் பயன்படுத்தவும் தெரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில், நமக்குள் இருக்கும் படைப்புத்திறனை வெளிக்கொணரவும் வேண்டும்.
அடுத்தவரின் மூளைத்திறனைக் குறைவாக பயன்படுத்தி உங்கள் சொந்த மூளைத்திறனை அதிகமாக பயன்படுத்தி பாருங்கள். நீங்கள்தான் எங்கும் எதிலும் முண்ணணியில் இருப்பீர்கள். மிண்ணணு பொருட்களின் ”பொன் விலங்கை” சற்றே கழற்றி விட்டு…….
படைப்பாற்றலைப் பெருக்க யெல்படுங்கள்.
நன்றி- சுற்றுச்சூழல் புதியகல்வி -- கே..அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (18-Dec-15, 8:03 pm)
சேர்த்தது : கேஅசோகன்
Tanglish : pon vilangu
பார்வை : 141

மேலே