காதல் ஆண்டாள்களேவிழியுங்கள்
முன்னுரை :
அன்று ; பாண்டிய மன்னன் வல்லப தேவன் போன்ற சீடர்களும் ; கோயில் பரிகாரமும் பார்த்திருக்க ;ஆண்டாள் தட்டுச்சேலை அணிந்து ,பருத்த செங்கழுநீர் மாலைசூடி ,
சீரார் வளையொலிக்க,சிலம்புகள் ஆர்க்க ,அன்ன நடையிட்டு ,அரங்கனைக் கண்களாரக் கண்டு... அவனடி சேர்ந்து ... மறைந்தே போனாள் ; அனைவரும் வியந்தனரே ...!
பெண் என்றால் அன்பு ...! ஷக்தி ...! புனிதம் ...! ஆதிஅந்தம்...!
அதன் அவதாரங்கள் வழிபாட்டுக்குரியன...!
*********************************************************************************************************
* மார்கழி சுப்ரபாதம்
மனமெங்கும் ஆலிங்கனம்
துயிலினை களைவாயா
தரிசனம் காலட்சேபம்
சூடித்தந்த நாச்சியாரும் நீயல்லவா
சூழுகின்ற மாயை வெல்லும் தீயல்லவா
ஆளுகின்ற துளசியின் வாசம் போலே
ஆறாக வாழ்வதும் நீயல்லவா
திருவரங்கனின் திருவடியே
படிந்தேலோர் எம்பாவாய்...!
* நீராடி நீ ஆடி
நீ ஓடி வா தோழி
தெய்வீக சந்நிதி உன் பாதமே நாடி
நற்றமிழ் நீ பாடி
நறுமணமே கூடி
கங்கை ஆடுகிறாள் உன் நாமமே பாடி
வேதங்கள் யாவைக்கும் கோதையுன் தமிழே
வித்தாகும் வேராகும் ஆதார மொழியே
பல்லக்கில் நீயிருக்க வில்லையுன் தமிழே
பண்ணிசை கேட்டிருக்க வில்லை யுன் குரலே
ஆழ்வாரோ பார்த்திருக்க
அடியாரும் பூத்திருக்க
அரங்கத்து எம்மானை
கைத்தலம் பற்றிடவே
பாரிஜாதமே வருக
பாற்கடல் நீ பெறுக
* பிரபந்தம் நீ மொழி
திருமொழி உன் மொழி
மாதவன் பாற்கொண்ட காதல் நீ தானடி
முப்பத்து முக்கோடி
தேவரும் பூத்தூவி
பரமனை வீழ்த்திய பைந்தமிழ் நீயடி
நால்வரும் அர்ப்பணித்த இறைவழி வாழியே
ராதை நீ கீதையும் நீ எந்நாளும் வாழியே
பூலோக ஜீவிதத்தின் மூலம் நீ தாயே
வைகறை வேறு ஏது எழுந்தருள்வாயே
மகிஷாசுரமர்த்தினியே
புவியாளும் பத்தினியே
அனைத்துயிர் வாழ்ந்திடவே
விழிமலர் நீ திறவாய்
பரமபதமே வருக
இறைநிலை நீ பெறுக