குருவி- ஆனந்தி

அதிகாலை
மார்கழி பனிநாளில்
யாருமற்ற வேளையில்
சிறு குருவி ஒன்று
வட்டமடித்து
வட்டமடித்து
ஆனந்த கீச்சிட்டு
அங்கும் இங்கும்
சுற்றி சுற்றி.
அசையா
மின்விசிறிக்கு மேலேயும்
நெகிழி பூக்களுக்குள்ளும்
அட்டை போட்ட என்
புகைப்படத்திற்கும்,
வராண்டா நாற்காலிக்குமென
என மாறி மாறி
ஆனந்த தாண்டவம்.
ஏதேதோ எண்ணத்தில்
மூழ்கி கிடந்த
என்னையும்,
கலைத்து அதன் ஆனந்த
சிறகசைப்பில்
மகிழ்வின் எல்லைக்குள்
அழைத்து செல்கிறது.

எழுதியவர் : ஆனந்தி.ரா (20-Dec-15, 11:42 am)
பார்வை : 213

மேலே