நிலா
நிலா
ஆம்ஸ்ட்ராங் நடையிட்ட இடம்
ஆயா வடை சுட்ட இடம்
இந்த விண்முகம்தான்
அதிகமாக ஒப்பிடப்படுகிறது
பெண்முகத்திற்கு
நாமெல்லாம்
சாமியைச்சுற்றிக்கொண்டிருக்க
நிலவு மட்டும்
பூமியை சுற்றிக்கொடிருக்கிறது
சந்திரனே
நீ வந்தால்தான்
எங்கள் குழந்தைக்கு இரவு உணவு
அமாவாசை அன்று
அம்மாவால் கூட ஊட்டமுடியவில்லை
மழலைக்கு தோசை
நண்பன் இல்லாமல்
கடைக்கு செல்வோருக்கு
இரவில் உடன் செல்லும்
நண்பன் சந்திரன்
பகலில் நம்மோடு நிழல்
இரவில் நம்மோடு நிலா
பிறை வளர்வதும் தேய்வதும்
மனிதன்
வளந்தாலும் தேயலாம்
தேய்ந்தாலும் வாழலாம்
எனத் தத்துவம் சொல்லவோ ?
நிலவே இருந்துவிடு அங்கே
ஒருபோதும் எங்களிடம் நெருங்காதே
நெருங்கினால்
அறுபதுக்கு இருபதாகிவிடுவாய் இங்கே
ஆதவனின் தங்கை
ஆடவரின் மங்கை
பௌர்ணமியின் வெண்முகத் தலையில்
நட்சத்திரங்கள்
தலைவைக்கும் பூக்களா இல்லை
இலைமொய்க்கும் ஈக்களா?
மேகங்களின் தழுவல்
கரையைத் துடைக்கவோ ?