மனமே விழித்திரு
![](https://eluthu.com/images/loading.gif)
மனமே மனமே மருகாதே!
மாறும் காலம் கலங்காதே!
விழியே கண்ணீர்
உதிர்க்காதே! வீணாய்
இலட்சியம் அவிக்காதே!
அணையா தனலாய்
இலட்சிய வேள்வி...
அதனிடை இட்டிடு
மாய்க்கும் தோல்வி!!!
பங்கயம் சிறப்பெல்லாம் நீர்
பரப்பினது சிறப்பே...!
விருததன் உயர்வெல்லாம்
பெறுபவர் தமதே...!
இலட்சிய மனிதனின்
சிறப்போ கனவு
எட்டும்வரை
போராடலே...!
இன்னல் நெருப்பாய்
சுட்டிட்ட போதும்...
இன்னுயிர்தனை இழக்க
நேர்ந்திடும் போதும்...
சுற்றம் வசைமாரி
பொழியும் போதும்...
தோல்விகள் தோளிலேறி
அழுத்தும் போதும்...
வழியது மாறாமல்
நெறியது மீறாமல்
மேலோர் காட்டிய
பாட்டையதில்
பயணித்திடு
அதுபோதும்!!!
வலிகளற்றது
வாழ்க்கையில்லை...
இடரலில்லாதது
இமயமில்லை...
இருட்குகையிருந்து
வெளிவரும் மாச்சிறை
பறவையாய் சிறகு நீட்டி
பறந்திடு!
உனக்கேன் தளை?
கனவே கலையாமல்
கண்ணிமையாய்
பதிந்திடு... உழைப்பே
தோல்வியிலும்
அணிவகுப்பு நடத்திடு...
இலக்கே நாளும் என்னுள்
பசித்திரு...! இலட்சியம்
எட்டும் நாள் நிச்சயம்
நேரும் அதுவரையில்
மனமே விழித்திரு!!!