வலித் துளிகள்

நீலம் பூத்த
உன் விழிகளைப் பருகினேன்
விஷம் என்று அறியாமல் !
**********************************************
எரிமலை கக்கும்
உன் விழிகளுக்குள்
விழுந்து விட்டேன்
தீய்த்துவிடாதே
கண்ணீராவது விடு !
**********************************************
உன் கைவளை சிணுங்கலில்
சுரங்களின் நாட்டியம் ....
என் பார்வை பட்டதும்
சுருதி தப்பியதோ ...
அபஸ்வரமாய் ஒலிக்கிறதே !
*************************************************
சாரலாய்த் தூவினாய்
சிலிர்த்தது இதயம்
அடித்துத் தாக்கினாய்
மழையாய் ....
நொறுங்கியது காதல் !
*************************************************
என் மந்திர இதழ்கள்
முத்தத் தாளங்களை
வாசித்தது ...
உன் தபேலா கன்னங்களில் .....
கனவில் !