amma (thaayaai tharaniyil vanthe) vilvaashtagam mettu)

தாயாய் தரணியில் வந்தே
தன்னருளை தந்திட்டாள்
தருமம் தழைத்திடவே
தன்முனைப்பை நல்கிட்டாள்

நாள் தோறும் பிறர் நலமே
நாடி உள்ளம் மகிழ்ந்திட்டாள்
நங்கை அவள் நற்குணங்கள்
நானிலத்தில் பல பெற்றாள்

பலவாறு பேணி நம்மை
பரிவுடனே காத்திட்டாள்
பாதமே துணை என்றெண்ணி
பணிவுடனே வணங்கிடுவோம்

கடைக்கண்னால் காத்தருள் புரிந்தே
கவலையெல்லாம் மாயத்தருள்வாள்
கனிவுடனே காத்து நாளும்
கற்பகமே அருள்புரிவாள்


சகல நலம் புரிந்தே நாளும்
சஞ்சலமதைப் போக்கிடுவாள்
சர்வ வியாபியாய் எங்கும் திகழ்ந்தே
சந்ததமும் காத்திடுவாள்

உயர் நலன்கள் பல தந்தென்றும்
வூக்கத் தோடு நம்மைக் காப்பாள்
ஊனங்கள் யாவும் போக்கி
ஊன் உயிரில் கலந்து நிற்ப்பாள்

உத்தமியே உன்னைப் பாடும்
உலகோரைக் காத்தருள்வாய்
வாழ்க நீ என் தாய் என்றே
வாழ்த்திப் பாடி மகிழ்ந்திடுவேன்.

எழுதியவர் : திருமதி .ஸ்ரீ விஜயலட்சுமி (11-Jun-11, 9:51 am)
பார்வை : 448

மேலே