பெண் பால்
வீட்டுத் தோட்டத்தின்
சங்கு புஷ்பங்கள்
எடுத்து ரசித்திட
இலைக் கரங்கள்
அவரைப் பந்தலின்
பிஞ்சுப் பூக்கள்
காய்களைத் தேடி
அலைகிற
விழிக் கழுகுகள்...
மொட்டு மொட்டாய்
சில குட்டிப் பூக்கள்
தொட்டிச் செடிகளில்
விளைகிற
வாசக் கனிகள்...
புல்பரப்பில்
பூண்டுப் பூக்கள்
முட்களுக்குள் மலர்ந்து
சிரிக்கிற
கற்றாளைப் புதர்க் கள்ளிகள்...
கள்ளிப் பால் குடித்தும்
வெள்ளையாய்ச் சிரிக்கும்
மூக்குத்திப் பூவணிந்த
பெயர் தெரியாத
சில
பெண் பால் பூக்களும்...!