என்ன தருவாய்?


சொல்லடுக்கப் பழகும்
என் விரல்களுக்குப்
பூத் தொடுக்கப்
பழக்குவாயா?
மல்லிகையே...

இமைக்குள் சுருங்கும்
உலகத்தை
கணினித் திரைக்குக்
கருவிழிகள்
ஆக்குவாயா?
தொழில் நுட்பமே...

பாதை படரும்
பாதங்களுக்கு
பரத அபிநயம்
ஜதி சொல்வாயா?
கொலுசு நட்டுவனாரே...

குதிரைச் சவாரிக்கு
இயந்திரப் புரவி
உன்னைச் சுமக்கும்
இதயத்துக்கு
என்ன தருவாய்?
நவீன விஞ்ஞானமே...!

எழுதியவர் : அன்புபாலா (11-Jun-11, 7:43 am)
சேர்த்தது : anbubala
பார்வை : 264

மேலே