சமச்சீர் கல்வி
சூரியப் புள்ளியில்
சோறு சமைத்துப்
பழகுகிற
சோதனைக் கூடத்து
கான்வென்ட் சிறுவர்கள்
வளாக வெளியில்
திரிகிற
கோவணக் குழந்தைகள்
பார்த்துக்
குசு குசுவென
பேசிக் கொள்ளும்
தங்களுக்குள்
அரைஞான் கயிறவிழ்த்து
வற்றிய வயிறு
பார்த்துச் சிரிக்கிற
குறும்புத் தனத்தோடு
காற்றில் பறக்கிற
கொள்கைகளோடும் தான்
கயிற்று முடிச்சில்
கரமசைத்து
சிரிக்கிற
கட்சிக் கொடிகளைப்
பார்த்து...!