குற்றத்தை மறைக்க
செய்த ....
குற்றத்தை ஒப்பு கொள்....
செய்த குற்றத்தை மேலும் ....
செய்யாதே - அது மடமை ....!!!
குற்றத்தை மறைக்க ...
இன்னுமொரு குற்றத்தை ...
செய்துகொண்டே இருப்பது ....
உடலை அழகு படுத்த ...
உடையை மாற்றும் மாயையாகும் ....!!!
+
குறள் 846
+
புல்லறிவாண்மை
+
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 66