அழகைத் தேடி

இயற்கை அழகில் உள்ள
எழில் கவர்ச்சி அமைதி
எந்த அழகு சாதனத்தாலும் கிடைக்காது
அழகுக்கு அழகு சேர்க்க துடிக்கும் மக்கள்
முக அழகுகளில் எத்தனையோ
இவற்றை செய்யும் முறையில்
முதலில் நிதானம் வேண்டும்
இந்த முகத்திற்கு இப்படி அழகு சேர்க்கலாம்
இந்த இராசயனப் பொருட்களை
இவர்களுடைய முகத்திற்கு போடலாமா
வேண்டாமா என்று எதையும் சிந்தித்து
செயற்பட வேண்டும்
ஒரு சில அழகு நிலையங்கள்
இவற்றை எல்லாம் சிந்திப்பதே இல்லை
எவர் வந்து எந்தஅழகு சாதனம்
கேட்டாலும் ஓகே சொல்லி போட்டு விடுவார்கள்
அதனால் சிலர் இராசாயன
பொருள்களின் ஒவ்வாமையினால்
நோய்வாய்ப் படுகிறார்கள்
திரும்பிப் போய் அவர்களிடம் கேட்க முடியுமா/இல்லை
ஏன் நாமாக தேடிப் போனோம்
அனுபவிக்க வேண்டியுள்ளது
ஆகையால் அழகு நிலையங்கள் செல்லும் வாடிக்கையாளர்களே
நீங்கள் உங்களுக்கு எது உகந்ததோ அதை தெரிந்து
கேட்டு அழகுபடுத்திக் கொள்ளுங்கள்
ஆண்டவன் படைத்த அழகை விட
அழகு வேறு இல்லை. இயற்கை அழகே அழகு,
இயற்கையுடன் ஒன்றித்து வாழ்ந்தால்
ஆயுள் எல்லாம் அழகுடன் வாழலாம்
இயற்க்கை அழகு நம்முடன் கூடவே பிறந்தது கூடவே வரும்
அழகைத் தேடி அலைய வேண்டாம்
அதை உங்களிடம் அள்ளித் தந்திருக்கிறார் ஆண்டவன்

எழுதியவர் : பாத்திமாமலர் (22-Dec-15, 8:44 pm)
பார்வை : 70

மேலே