facebook-காதல்
அறிமுகமானாய்...
கைவிரல் கணினியில் விளையாட..
நீயும் எனக்கு அறிமுகமானாய்..!
எதிர்பாராமல் வந்தாய்..
எதையும் எதிர்ப்பார்க்காமல் வந்தாய்..!
அன்பின் எல்லை இது தானோ?
அடியே அதுவும் நீ தானோ?
எத்தனைக் கனிவாய் உரைத்தாய்..
உன் காதலை உள்ளே மறைத்தாய்..!
நாளும் பேசி நெருங்கி வந்தாய்..
உன் பாசம் தனையே அள்ளித் தன்தாய்..!
எனக்குள் இருந்த மனவாட்டம்
கண்ண்டதும் கண்கள் கலங்கி நின்றாய்..!
என்னடி நானும் செய்து விட்டேன்..!?
இப்படி என்னுள் கலந்துவிட்டாய்!!
பெண்களின் காதல் தூய்மையடி!
சத்தியம் உணர்ந்தேன்! உண்மையடி!!
நாம் சேர்ந்திட மனமோ துடிக்கிதடி!
பிரிவால் நித்தம் வேடிக்கிதடி!
உன் அன்பை ஏற்க்க மறுத்துவிட்டேன்!
அதனால் எனையே வெறுத்துவிட்டேன்!!
உன்னிடம் மன்னிப்பு கேட்ட்க தகுதியில்லை!
நீ இல்லா வாழ்வில் அமைதியில்லை!!