வாழ்வின் வெறுமை
தனிமையிலே...
கண்கள் ரெண்டும் கலங்குதடி..
கனத்த நெஞ்சம் நோருங்குதடி..
அநாதை போலே அலைகின்றேன்..
ஆதரவு தேடி அழுகின்றேன்!
மனதில் ஆயிரம் ஆர்பட்டம்..
ஆனந்தம் தேடியே கண்ணோட்டம்..!
காலை மாலை தெரியவில்லை!
மயக்கம் இன்னும் தெளியவில்லை..!
உயிரை எங்கோ தொலைத்து விட்டேன்..
இங்கே பிணமாய் மண்ணில் வாழ்கின்றேன்..!
மனதின் உள்ள வலிக்கிறதே..
காரணம் ஏனோ தெரியலையே..!
பைத்தியம் போலே பிதற்றுகிறேன்..
அர்த்தங்கள் இன்றி புலம்புகிறேன்!
வார்த்தைகள் கூட வலிக்குதடி
வெளி வர எண்ணித் துடிக்கையிலே..!
ஏனோ என்னுள் இந்த வலி?
யாரோ சொல்வார் நல்ல வழி?
காதல் எனக்கு கசந்ததடி..
வாழ்வே வெறுமை ஆனதடி!
வந்தது வரட்டும் விட்டுவிட்டேன்
வெறுமையின் உச்சம் தொட்டுவிட்டேன்
நலத்தோ! தீயதோ! நான் அறியேன்!!
நடப்பது எல்லாம் அவன் அறிவான்!!