அவளோடு ஒரு நாள் 555

உயிரானவளே...

காதல் என்றால்
என்ன என்றேன்...

கணவன் மனைவி வாழ்க்கையில்
தான் ஜீவன் இருக்கிறது என்றாய்...

நீ எப்போது ஞானியானாய்
என்றேன் லேசாக சிரித்தாய்...

காதலை நீ நம்புகிறாயா
என்றேன்...

கணவன் மனைவிக்குபின்
முன்னல்ல என்றாய்...

கைகோர்த்து நடந்தால்
காதலர்கள்...

கைபிடித்து நடந்தால்
கணவன் மனைவி...

உனக்கு எது பிடிக்கும்
என்றேன்...

புன்னகையோடு
இரண்டுமே என்றாய்...

இறுதியாக ஒரு கேள்வி
என்றேன்...

புருவம் உயர்த்தி
பார்த்தாய்...

அந்த கணவன் மனைவி
யார் என்றேன்...

சிரித்துவிட்டு சத்தியமாய்
நாம் இல்லை என்றாயடி...

உன்னோடு நான் பேசிய
இந்த நாள்...

இதுவே நான் உன்னை
சந்திக்கும் இறுதி நாள்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (24-Dec-15, 6:26 pm)
பார்வை : 434

மேலே