தேர்தல்

வெட்டி பேச்சு நிறைஞ்ச எங்க ஊருக்கு
வந்தது தேர்த்லுங்க
நிண்ணாங்க மூணு பயலுங்க
அதுல இரண்டு தேறாது ஒண்ணு திருடு
ஜெயிச்ச திருட்டு பயல்
கொண்டு வந்தது மூணு திட்டமுங்க
அதுல இரண்டு அவனுக்கு ஒண்ணு கணக்குங்க
கணக்கு திட்டத்துக்கு வந்தாங்க மூணு அதிகாரிங்க
அதுல இரண்டு அசுடு ஒண்ணு முசுடு
முசுடு போட்டதுங்க மூணு சாலைங்க
அதுல இரண்டு காகிதத்திலு ஒண்ணு பாதையே இல்லைங்க
பாதையில்லா சாலைக்கு திறக்க
வந்தாங்க மூணு மந்திரிங்க
அதுல இரண்டு வெளி மாநிலங்க ஒண்ணு வெளிநாடுங்க
வெளிநாட்டு மந்திரிக்கு வெளக்க நாளாச்சுங்க
வெட்டி பேச்சு நிறைந்த எங்க ஊருக்கு
அதுக்குள்ளே வந்தாச்சுங்க அடுத்த தேர்த்லுங்க...


- செல்வா
இது நாடோடி பாடல் "முள்ளுமுனையில மூணு குளம் வெட்டினேன்" பாதிப்பு

எழுதியவர் : செல்வா (23-Dec-15, 7:18 am)
Tanglish : therthal
பார்வை : 220

மேலே