தனி முகில்

கரு முகிலில் தனித்துவிட்ட
தனி முகில்...
ஒரு முகில்.. எட்டிப்பார்க்கிறது எனை
ஏக்கத்தோடு...
எனை ஏமாற்றி ஏன் பிரிந்தார்
என்னினத்தார்.

வானுக்கு வண்ணமாய்
உனை நிறுத்தி...
நீர் எடுக்க தீயாய் விரைந்தார்
மண்ணுக்கு மழை கொடுக்க
மனமுவந்து நீர் எடுக்க...
மரம் குளிர்ந்து மண் அதிர
தன் கரைந்து மனமகிழ்ந்தார்...
தரணியில் உள்ளோர்
தரம் உயர உயிர் தழைய.....

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன்) (23-Dec-15, 6:28 pm)
Tanglish : thani mugil
பார்வை : 149

மேலே