தேடல்
முகவரி ஏதும் தராமல்
அகதியாய் நீ எனை விட்டுசென்ற
பின்பு
என் மனம் கவர்ந்தவனே..உனை
தினம் தேடி அலைந்தேன்
யாரை பார்த்தாலும் நீயே
தெரிகிறாய்
ஓடிச்சென்று ஆவலாய்
நோக்கினேன்
அறிந்தேன்...
ஏமாற்றியது நீ மட்டும் அல்ல
உன் மீது ஆழமான அன்பு கொண்டுவிட்ட
என் பாழாய்ப்போன காதல் மனதும் தான் என்று!!!