மதி அருணா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மதி அருணா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 11 |
தினம் தவறாமல் பேசிய நீ
பேசாததன் அர்த்தம் புரிந்தது ....
வீட்டில் தொலைக்காட்சி நாடகம் புதிதாய் .
நான் இல்லையென்றாலும் உனக்கு மகன் இருக்கிறான்
புதிதாய் வந்த வயிற்றில் பிறவா மகளும்
இன்னொரு தமயனுக்கும்
இன்னொரு தாய்க்கும் நான்
எங்கே போவேன் ?
ஒவ்வொரு முறையும் நீ பேசமாட்டாயா
என்றுள்ளம் ஏங்கும்....
உன் பாதத்தில் வரும் ஒவ்வொரு முறையும்
சுவற்றில் அடித்த பந்தாய் ....
உன்னால் விடப்படும் உன் மகள்.
மறந்து விட்டதாய் நடித்துக்கொண்டிருந்த
மனதை பொய்யாக்கியது
இன்று உன்னை பார்க்க நேர்கையில்
இதழ்களில் தவழ்ந்த புன்னகையும்
உன்னை பிரிந்து போகையில்
கண்களில் பிறப்பெடுத்த புது கண்ணீரும் ..........
மறந்து விட்டதாய் நடித்துக்கொண்டிருந்த
மனதை பொய்யாக்கியது
இன்று உன்னை பார்க்க நேர்கையில்
இதழ்களில் தவழ்ந்த புன்னகையும்
உன்னை பிரிந்து போகையில்
கண்களில் பிறப்பெடுத்த புது கண்ணீரும் ..........
உன்னைத் தேடி ...
சலித்து கொண்ட தோழியவளையும்
ஏதேதோ காரணம் சொல்லி
அழைத்துக்கொண்டு ...
எங்கேயும் சுற்றிப்பார்த்தும்
நீ இல்லாமல்
அவள் கைபிடித்து தோள் சாய்ந்து
வாடி நின்ற போது....
நீயா என்று நினைப்பதற்குள்
நீதான் என்று உரைத்தபிறகு
அகல விரிந்த கண்களையும்
அதிர்ந்து துடிக்க மறந்த இதயத்தையும்
என்னவென்று பதறிய தோழியையும்
எதுவுமே நடக்காதது போல்
சமாளித்து முடிப்பதுற்குள்
அஸ்தமித்தது நம் கண்களின்
அரை நிமிட சந்திப்பு....
உதித்தது பல நூறு பட்டாம்பூச்சிகள் என் மனதில்.....
.
உன்னைத் தேடி ...
சலித்து கொண்ட தோழியவளையும்
ஏதேதோ காரணம் சொல்லி
அழைத்துக்கொண்டு ...
எங்கேயும் சுற்றிப்பார்த்தும்
நீ இல்லாமல்
அவள் கைபிடித்து தோள் சாய்ந்து
வாடி நின்ற போது....
நீயா என்று நினைப்பதற்குள்
நீதான் என்று உரைத்தபிறகு
அகல விரிந்த கண்களையும்
அதிர்ந்து துடிக்க மறந்த இதயத்தையும்
என்னவென்று பதறிய தோழியையும்
எதுவுமே நடக்காதது போல்
சமாளித்து முடிப்பதுற்குள்
அஸ்தமித்தது நம் கண்களின்
அரை நிமிட சந்திப்பு....
உதித்தது பல நூறு பட்டாம்பூச்சிகள் என் மனதில்.....
.
என்ன தவம் புரிய வேண்டும் சொல்...
அடுத்த ஜென்மம் என்றொன்றுண்டெனில்..அதில்
உன் தோழியாய் நான் வலம் வர..
உன் விழியில் நான் கலந்து வளர்த்த
நம் அன்பென்னும் குழந்தை ...
ஜனனம் பெற முடியாமலே...................
காற்றாடிக்கும் எனக்கும்
ஒற்றை வித்தியாசமே,..
காற்றின் திசையே அதுவும்,
உந்தன் திசையே நானும்..!
உனக்காய் எழுதும்
கவிதைகளே - எனை
காதலிக்க தொடங்கிவிட்டன,..
நீ மட்டும் இன்னும் மோனத்திலே..!
நீ பார்த்துப் போன
கடைசி பார்வையிலே
காந்தமாய் ஒட்டிகொண்டது
காதல் கொண்ட மனதும்..!
ஒற்றை ரோஜா கூட
சூடிக்கொள்ள மறுத்தேன்
உன் முத்தங்களில் அதுவும்
பங்கு கோருமாே எனும் பயத்தில்..!
பூப் போன்ற நெஞ்சம்
எப்படித்தான் தாங்கும்
புயல் போன்ற உந்தன்
புறக்கணிப்பின் வேகத்தை..!
அநாதை விழியில்
வழிந்திடும் நீராகவே
துடைக்க கைகளின்றிய
உனக்கான என் காதலும்..!
என் இளமைக்கு
இலக்கணம் கூ
முகவரி ஏதும் தராமல்
அகதியாய் நீ எனை விட்டுசென்ற
பின்பு
என் மனம் கவர்ந்தவனே..உனை
தினம் தேடி அலைந்தேன்
யாரை பார்த்தாலும் நீயே
தெரிகிறாய்
ஓடிச்சென்று ஆவலாய்
நோக்கினேன்
அறிந்தேன்...
ஏமாற்றியது நீ மட்டும் அல்ல
உன் மீது ஆழமான அன்பு கொண்டுவிட்ட
என் பாழாய்ப்போன காதல் மனதும் தான் என்று!!!