அம்மா

தினம் தவறாமல் பேசிய நீ
பேசாததன் அர்த்தம் புரிந்தது ....
வீட்டில் தொலைக்காட்சி நாடகம் புதிதாய் .

நான் இல்லையென்றாலும் உனக்கு மகன் இருக்கிறான்
புதிதாய் வந்த வயிற்றில் பிறவா மகளும்
இன்னொரு தமயனுக்கும்
இன்னொரு தாய்க்கும் நான்
எங்கே போவேன் ?


ஒவ்வொரு முறையும் நீ பேசமாட்டாயா
என்றுள்ளம் ஏங்கும்....
உன் பாதத்தில் வரும் ஒவ்வொரு முறையும்
சுவற்றில் அடித்த பந்தாய் ....
உன்னால் விடப்படும் உன் மகள்.

எழுதியவர் : (28-Mar-17, 10:22 pm)
சேர்த்தது : மதி அருணா
Tanglish : amma
பார்வை : 158

மேலே