ஒரு தாயின் கதறல்

வெயிலில போனாக்கா மேனியெல்லாம் கருக்குமுன்னு
வீட்டுக்குள்ள பொத்தி வச்சு பொன்னு போல காத்தேனே...

பனியில போனாக்கா குளிரு வந்து ஜுரமாகி போவியேனு
கம்பலி துணியால சுத்தி வச்சு காத்தேனே...

ஒத்த ஜட போட்டுக்கவா?ரெட்ட ஜட போட்டுக்கவா? கொஞ்சி கொஞ்சி நீ கேட்டியே
எந்த ஜட போட்டாலும் கண்ணு பட்டு போவுமுன்னு த்ரிஷ்டி பொட்டு வச்சேனே...

மயில் கணக்கா குடத்த தூக்கி சுமந்துகிட்டு வேர்வையோடு நா வந்தப்ப
குட்டி குடம் தூக்கி கிட்டு வாசலில நீ நின்னியே...


குண்டுக்குழி ரோட்டுல ஜனங்க கஷ்டப்பட்டு நடக்கறப்ப
கலெக்டராக நா வந்து ரோடு போட்டு தாரேன்னு அழகழாக சொன்னியே...

பள்ளிக்கூடம் முடிச்சு நீ வரப்ப களவானிப்பய கடத்திப்போனானே...

அவன் தேவைக்கு பல பொம்பளைங்க உலகத்துல இருக்கறப்போ
கண்மணி உன்ன களங்க படுத்திப்புட்டானே...

நீ வச்ச செடி அங்க பூப்பூத்து குழுங்குதே
நா பெத்த ஒத்த ரோசா நாதியத்து கெடக்குதே...

பாவம் முத்திய பாவிப்பயலுக்கு அஞ்சு வருச சிற தண்டனையாம்
ஒரு பாவம் அறியாத பிஞ்சு உனக்கு புதைகுழியாம்

கண்ணே மணியே
தங்கமே வைரமே
பாவப்பட்ட இந்த மண்ணுல எனக்கு வாழ புடிக்கலடி என் உயிரயும் உன்கூட கூட்டிக்கிட்டு போயிருடி...

---ஷாகி---

எழுதியவர் : ஷகிரா பானு (29-Mar-17, 6:09 am)
பார்வை : 920

மேலே