சந்திப்பு
உன்னைத் தேடி ...
சலித்து கொண்ட தோழியவளையும்
ஏதேதோ காரணம் சொல்லி
அழைத்துக்கொண்டு ...
எங்கேயும் சுற்றிப்பார்த்தும்
நீ இல்லாமல்
அவள் கைபிடித்து தோள் சாய்ந்து
வாடி நின்ற போது....
நீயா என்று நினைப்பதற்குள்
நீதான் என்று உரைத்தபிறகு
அகல விரிந்த கண்களையும்
அதிர்ந்து துடிக்க மறந்த இதயத்தையும்
என்னவென்று பதறிய தோழியையும்
எதுவுமே நடக்காதது போல்
சமாளித்து முடிப்பதுற்குள்
அஸ்தமித்தது நம் கண்களின்
அரை நிமிட சந்திப்பு....
உதித்தது பல நூறு பட்டாம்பூச்சிகள் என் மனதில்.....
.