போராட்டம்
காட்சிப் பிழைகள்
மனச்
சாட்சிப் பிழைகள்
ஆக வேண்டாம்..
அன்பு எனும்
கோட்டை அடியொற்றி
பரஸ்பரம்
பார்வையும் உணர்வும்
ஒன்றையொன்று
புரிந்து கொண்டு
கடந்து செல்லட்டும்.
எப்படியும் வாழலாம்
எனக் கண்
கூறினாலும்
இப்படிதான் வாழ வேண்டும்
என உள் உணர்வு
கூறுவதால் தான்
எதுவும் இங்கு
இன்னமும் சமநிலையில்
இருக்கிறது..
விதியையும் மீறி வேண்டாத
விஷப் பரீட்சைகள் எதற்கு??
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
