யார் உயர்ந்தவர்

யார் உயர்ந்தவர்?
----------+------
பிறப்பால் எவரும்
உயர்நதவர் அல்லர்.
மனு அதர்மத்தின்
பெரும் பிழையதுவே.

செயல்களாலும் சிந்தனையாளும்
நல்லதை மட்டும்
நெஞ்சில் நிறுத்தி
சமுதாயத்திற்கு உழைக்கும் மனிதரே
உயர்ந்தவராவார்; மாமனிதருமாவார்.

மனுவால் உயர்ந்வர்
ஆக்கப்பட்டவரகளில்
எத்தனை மாமனிதர்களை
இதுவரை கண்டோம்?

ஏழை மீனவரின்
மகனாய்ப் பிறந்து
உலகம் போற்றும்
உத்தமரான
அப்துல் கலாமிற்கு
இணையென்று சொல்லி
இந்த நூற்றிண்டில்
எவரைக் காட்டுவீர்?

எழுதியவர் : மலர் (25-Dec-15, 12:08 am)
பார்வை : 471

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே