உயிரை வாங்க வா

கண்களை விளக்காக்கிப் பிடித்திருந்தாய்
பார்த்துக்கொண்டே விழுந்துவிட்டேன்
உன் கிணற்றில்!

அழகும் மணமும் மிகுந்த
உன் வீட்டு ஆமணக்குப் பூவும்
கோடி ரூபாய்க்கு ஏலத்தில் போகும்.
நீ குளித்த நீரில் விளைவதால்.

நீ தேய்த்துக் குளிக்கும் சவர்க்காரம்
அழகாகி விட்டதென்று கொள்கிறது அகங்காரம்

குளக்கரையை குனிந்து பார்க்கும்
உன் கண்களால் குழப்பத்தில் கொக்குகள்.

எந்த ஊரில் ‘இடை’த்தேர்தல் வைத்தாலும்
வெற்றி உனக்குத்தான்.

நீ சாரல் மழையில் நனைந்து வந்தாலே
அடைமழையில் அகப்பட்டு கொள்கிறேன் நான்.

இருந்தும் குவளைகளை நிறைய
அமிர்தம் வைத்துக் கொண்டு
பருகத் தந்துவிடுகிறாய்
கண்ணீர்த் துளிகளை.

என்னிடம் இருக்கும் என்னை
உன்னிடம் ஒப்படைக்க
பெப்ரவரி பதிநான்கில்
செத்துப் போய்விடுவதாக இருக்கிறேன்
வந்து உயிரை எடுத்துக்கொண்டு போய்விடு.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (25-Dec-15, 3:07 am)
Tanglish : uyirai vaanga vaa
பார்வை : 195

மேலே