காதல்தோழி

மேல்நிலைப் பள்ளியில் முதல் நாள்...
பழைய நட்புகள் யாரும் இல்லாமல்
புதிய பள்ளியில் தனியாக
அமர்ந்திருந்த நேரம் 'நீயும்
ஸ்கூலுக்கு புதுசா' என்றபோது
தொடங்கிய அறிமுகம்.. வெள்ளிதோறும்
திருநீறு பூசிவிட்டு 'உனக்காகவும்
வேண்டிக்கிட்டேன ் டா' என்ற
அக்கறையுடன் நட்பாய்த் தொடர..இதை
கண்ட சக மாணவர்கள் காதல்
இதுவென செய்த கேலிகளை சிரிப்பால்
புறந்தள்ளி நட்பாய் இருந்து..கல்லூர
ி செல்லும் போதும் பஸ் ஸ்டாப் அருகே
அம்மாவின் பூக்கடையில் உதவியாக
இருந்தவளிடம் இன்பம் பகிர்ந்து பேசி
பழைய நட்பை தொடர்ந்தவன்.. கல்லூரி
முடித்து பணியிலும் சேர்ந்தான்..
காலங்கள் உருன்டோட வீட்டில்
இப்போது திருமண பேச்சு. 'உனக்கு
எந்த மாதிரி பெண் வேண்டும்?' என்ற
கேள்விக்கு இவன் தந்த பதில்கள்
அனைத்திலும் அவன் தோழியின்
குணங்கள் அத்தனையும் ஒத்துபோக..
காதலை உணர்ந்தவனாய் தோழியிடம்
காதலைச் சொல்ல பூக்கடைக்கு
விரைந்தான்..
கடையை அடைந்தவனுக்கு அங்கே ஓர்
ஆச்சரியம். தோழி காதலியாகி
தன்னையே மணம் முடிக்க தன்
அம்மாவிடம் விவதம் செய்து கொண்டு
இருந்தாள். மகிழ்ச்சியில் பனியாய்
உறைந்தவன் காதில் 'அவன் பணம்
இல்லாதவன் நான் பார்த்திருக்கும ்
மாப்பிள்ளையோ கோடீஸ்வரன்' என்ற
அவள் அம்மாவின் குறளால் இயல்பாகி
வீடுதிரும்பினான ். அன்று முதல்
காணாமல் போன காதல்தோழியின்
தரிசனம் கண்முன்னே இன்று -
பணக்கார கணவனுடன்..

எழுதியவர் : Moorthi (25-Dec-15, 5:19 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 171

மேலே