நீர்த்தாய்- எமை காப்பாய்
நிறமின்றி நீ வந்து
நரத்திரை கிழித்து விட்டாய்...
வெறும் நிழல்களாய் வாழ்ந்திருந்தோம்
நிஜம்தனை காட்டிவிட்டாய்...
உன்னிடத்தில் ஊர் வசித்தோம்...
இரக்கமின்றி விரட்டிவிட்டாய்...
விலையற்ற உயிர்களை
சொல்லாமல் சுருட்டிவிட்டாய்...
வந்தவழி நீ கொண்டாய்
சென்றவழி யார் கண்டார்...
நீ ஊரிணைக்க வரவில்லை
உள்ளம் இணைய காண்கின்றோம்...
அரவமின்றி ஊர் புகுந்தாய்
வாதமின்றி நீ வென்றாய்...
தவறேதோ எம்மிடத்தில் பாயும்
அப்பாவி பலிகள் எவ்வித்தில் நியாயம்...
ஏரியெனும் உன் வீட்டில் குடியேறி
திக்கின்றி தவிக்கின்றோம் தடுமாறி...
வேண்டுகிறோம் உன் வாசல் படியேறி
பெய்ய வேண்டும் அம்மாடி மும்மாறி...