மார்கழி மயக்கம்
கரு மேகம் கலைந்திடும் வேலை..
கதிரவன் உதித்திடும் காலை..!
பூத்துக்குளிங்கிடும் சோலை..
இனிதே துவங்கினேன் இந்நாளை!!
இலையின் மீதே பனித்துளி கண்டேன்..
வாசலில் அழகிய கோலம் கண்டேன்!!
விடைப் பெரும் நிலவின் தோற்றம் கண்டேன்..
ஒளிர் மிகு கதிரவன் உதிக்கக் கண்டேன்!!
சேவல் கூவிட தூக்கம் கலைந்தேன்..
நீண்ட மூச்சுடன் சோம்பல் முறித்தேன்..!
கதிரவன் ஒளியால் கன்னம் சிவந்தேன்..
பறவைகள் இசையால் கவலைகள் மறந்தேன்!!
இது மார்கழி மாதத்து மயக்கம் !!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
