டிசம்பர் இருபத்தாறு

ஒவ்வொரு டிசம்பர் மாதமும்
இருபத்தாறாம் தேதி
அண்மைக் காலமாக
மனதில் தோன்றும் எண்ணம்
சுனாமியின் உலுக்கல்
உலகையே உலுக்கிய
உருத் தெரியா கொடூரம்
இன்று அந்த நாள்
மறக்கமுடியாத ஞாபகம்
அந்த நாள் அழிவின் கையில் உலகம்
அழிந்தவை அழிந்தவையே
ஆனால் அழியாத வடு
மக்கள் நெஞ்சத்தில் கல்வெட்டாய்
யார் அறிவார் இயற்கையின் சீற்றம்
சொல்லாமல் கொள்ளாமல் வருவது
எப்படி வரும் எப்போ வரும்
தெரிந்து கொள்ள முடியாது
இது இயற்கையின் குணமே
இயற்கை அள்ளியும் தரும்
அழிவையும் தரும் ,
புரிந்து வாழ நேரம் இல்லை
தகுதியும் இல்லை நமக்கு