பண்ணாகப் பாடிடவே பாவங்கள் தீர்ந்திடுமே
மண்ணின் அருந்தவத்தால் மாதா பெருந்தவத்தால்
விண்ணிருந்த தூதுவரும் வேதங்கள் தாம்போற்ற
புண்ணியர் பாலகராய்ப் பூமியிலே தாம்பிறந்தார்
விண்ணில் ஒளிவீசி விண்மீன்கள் காட்டியதே
பண்ணிய அப்பம் பகிர்ந்தளித்த அன்புதனைத்
தண்ணீர் பழரசமாய்த் தாமாறச் செய்ததனைப்
புண்ணாம் தொழுநோயை போக்கிநலந் தேக்கியதைப்
பண்ணாகப் பாடிடவே பாவங்கள் தீர்ந்திடுமே