சீக்கிரம் வாங்க சிகரம் தொடுவோம் இந்த ஆண்டு

போவது சென்ற ஆண்டு மலர்வது இன்னொரு ஆண்டு
ஒவ்வொரு நாளும் ஒன்றாய் தோன்றின்
ஒன்றாவதில்லை ஒவ்வொரு நாள்ளும்
ஒவ்வொரு விடியலும் உயிரை தருதே
பாரினில் புள்ளினம் பறக்கும்போது அவை
நேற்றை நினைப்பதில்லை . இன்றைக்கென்று புதுப்
பிரமாணங்களை என்றும் எடுத்ததில்லை
மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த
இன்று, நேற்று, நாளையெல்லாம் .ஓ......! அவனுக்கு ஓரறிவு கூட
இருப்பதாலா. இருக்கட்டும். நேற்றின் நாளையாம் இன்று பற்றி
நேற்றே கவலை கொண்ட அவன் இன்றின் நாளையைப் பற்றி
சிந்திக்காமல் இருப்பானா. சிந்திக்கட்டும் சிந்திக்க வேண்டும்
நாளெல்லாம் ஒன்றுபோல் தோன்றினும் ஒன்றாவதில்லை.
ஒவ்வொரு நாளும் சிகரம் தொட இன்னொரு வாய்ப்பு.
வாழ்க்கைப் பயணம் தொடர்வோம் . புத்தாண்டில் புது
சிகரம் தொடப் பிரமாணம் எடுப்போம்.
(ஒரு இழப்பின் வேதனையில் என்னையே தேற்றிக் கொள்ள
எழுதிய வரிகள். எல்லோருக்கும் பொருந்தும்தானே.)

எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எழுதியவர் : மை சூ பாண்டியன் (26-Dec-15, 9:40 am)
பார்வை : 129

சிறந்த கவிதைகள்

மேலே