மீண்டும் மீண்டும்
மந்திரமும் ...தியானமும் தருமமும் யாதும்
மறந்தொரு நாள் காடேகுதலும் தான் மறைந்திடுமோ?
வெற்று உடம்பினை உயிரது நீங்கிட
அழுதிடும் உறவுகள் யாவும் துணையாக வந்திடுமோ ?
மறுபடியும் பாவையொருத்தி உதிரத்தில்
சூலாகி வருந்தி வளர்ந்து உறுகாலமதில் பிறந்திடுவேனோ ?
வளர்ந்து காளையாகி கன்னியொருத்தி தனைத்
தேர்ந்து மணந்து மண்ணில் மீண்டும் மகிழ்ந்திருப்பேனோ ?
மனமுமுயிரும் முதலாயெங்கும் சித்தமும்
சீவனும் ஒன்றாகி இல்லறமே நடத்தி கடந்திடுவேனோ ?
தன் குலம் விளங்க மகவுகள் தமை ஈன்று
பொருள் ஈட்டி பேரும் புகழும் பெற்றிருந்திடுவேனோ? ?
வேடங்கள் புனைந்து நரை பெருகி
திரைகள் கூடி கிழப் பருவம் அடைந்திடுவேனோ ?
நிரந்தரம் எதுவும் இல்லா நிலையிலும்
மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து வாழ்ந்திருப்பேனோ ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
