அந்த ஒரு நொடியில்

தாய் தந்தை இட்ட பெயர் மாறி
கோடீஸ்வரன் என்ற பெயர் வாங்கி

நேரம் காலம் மறந்து நின்று
வங்கி எல்லாம் பணம் நிறைத்து

கோடி ரூபாய் மதிப்பினிலே வீடு கட்டி
குளியலிட நீர் தடாகம் ஒன்று கட்டி

சொகுசான வாழ்வு கொண்டு
செல்வந்தன் என்று பெருமை இட்டு

தேடிவந்தோர் தெருவிலே காக்கவைத்து
தெனாவெட்டாய் திறத்தி விட்டு

நோட்டுகள் மட்டும் தொட்டு
நாணயங்கள் தட்டி விட்டு

அறு சுவை உணவு மட்டும்
ஆறு நேரம் உண்டு வந்து

பல கோடிகளில் ஊர்தி வாங்கி
பகட்டாக உலகம் சுத்தி

பஞ்சு மெத்தை மேல் உறக்க மிட்டு
பட்டாடடை மட்டும் அணிந்த என்னை....

அவர் என்ற மரியாதையை போய்
அது என்று அழைத்துக்கொண்டு

அனுமதி கேட்டு கண்டவரெல்லாம்
அனுமதி இன்றி என்னை கண்டு

கட்டிய வீட்டின் வெளியில் இட்டு
உடைந்த சட்டியில் நீராடி

பட்டுத்துணி இருக்க
வெள்ளை துணி சுற்றி

கோடிகள் பல இருக்க
ஒற்றை ரூபாய் மட்டும் இட்டு

அறுசுவை உண்ட வாயினிலே
அரிசி மட்டும் இட்டு விட்டு

சொகுசு வண்டி தலை திருப்ப
மூங்கிலிலே என்னை சுமந்து

கோடீஸ்வரன் என்ற பெயர் மாறி
பிணம் என்ற பெயர் வாங்கி

பாடையிலே எனை சுமந்து
சாலையிலே காட்சியாக்கி

மன்னனை போல் வாழ்ந்த என்னை
மண்ணறையில் இட்டனரே...

பெற்ற செல்வமில்லை
சுமந்த கஷ்டமெல்லாம்
ஒருநொடியில் அழிந்தது ஏன்???

எழுதியவர் : என்றும் அன்புடன் ஸ்ரீ (26-Dec-15, 1:24 pm)
Tanglish : antha oru nodiyil
பார்வை : 352

மேலே