Nuclear-குடும்பம்

நாம் இருவர்..நமக்கு ஒருவர்..
தேவையில்லை வேறொருவர்!!
இதுதான் எங்கள் குட்டிக் குடும்பம்!

பாசம் காட்ட பாட்டியில்லை!
பணம் கொடுக்க பாட்டன் இல்லை!
அத்தையில்லை , மாமனில்லை,
உடன் பிறந்தோர் யாருமில்லை!!

பணியில் பெற்றோர் மூழ்கிடவே..
நான் கணினி வளர்ப்பில் வளர்ந்த பிள்ளை!!

தனிமை எனக்குப் புதியதில்லை!
சொந்தபந்தம் தெரியவில்லை!

உறவின் முறைகள் தெரியாமல்..
அக்காவைக் கூட AUNTY என்றழைத்தேன்!!

மன்னியுங்கள்...
நான் வளர்ந்தது NUCLEAR குடுமபம்!

எழுதியவர் : நேதாஜி (26-Dec-15, 12:28 pm)
சேர்த்தது : நேதாஜி
பார்வை : 164

மேலே