தடம் எண் மூன்றிலிருந்து

அப்பா..எப்படியும் கஷ்டப் பட்டு
பணம் அனுப்புறேன்..நீ நல்ல படிக்கணும்பா...
செல்லம் கொடுத்து வளர்த்த
பச்சக் கொழந்த மாப்ள...பாத்துக்குங்க..
மொழி புரியாத இடத்துல வேல கெடச்சிருக்கு..
நம்ம சாப்பாடெல்லாம் கிடைக்காதே....
கொஞ்சநாள் கழிச்சு அம்மாவும் வந்துர்றேன்..
உம்மாவ நல்லபடியா பாத்துக்கப்பா..
குளிர் அவளுக்கு ஒத்துக்காது...
ஞாயித்து கெழம பக்கத்திலிருக்கிற
சர்ச்சுக்கு போக மறந்துடாதே ஜாஸ்மின்..
மூணு மாசக் கைக்கொழந்தையோட போற
மாமியார்காரி நல்லா பாத்துக்குவாதானே..
ஊர்க்காரங்களுக்கெல்லாம் சவரம் பண்ணி
சலிச்சு போயிட்டேன்...பயிற்சி முடிஞ்ச
கையோட நம்மூர் கலெக்டரா நீ வரணும்..

பயணிகளோடு
பயணக் கட்டுகளையும்
முன்பதிவு செய்யப் படாத
நம்பிக்கைகளையும் ஏற்றிக் கொண்டு
தடம் எண் மூன்றிலிருந்து புறப்பட்டது
அந்த விரைவு ரயில்..

எழுதியவர் : ஜி ராஜன் (26-Dec-15, 3:20 pm)
பார்வை : 83

மேலே