தீக்குச்சியின் கெதிதான்

தலை முழுக்க நச்சு .....
நல்ல சிந்தனையே இல்லை ....
கெட்டவருடன் ஒன்று சேர்ந்து ....
சாம்பலாகிறது ....
தீக்குச்சி .....!!!

மனிதா சிந்தனையை ....
சீராக்கு - நல்லவர்களுடன் ...
ஒன்று சேர் ....
இல்லையேல் உன் கெதியும் ...
தீக்குச்சியின் கெதிதான் ....!!!

தீக்குச்சி
தானாக எரிவதில்லை....
இன்னொரு கெட்டதுடன்....
சேர்ந்தே எரிகிறது ....
ஒருவன் கெடுவது தற்செயல் ....
கெட்டவனோடு சேர்வது ....
அதர்மம் ......!!!

^

முயன்றால் முடியாதென்றொன்றில்லை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (26-Dec-15, 5:13 pm)
பார்வை : 107

மேலே